internet

img

விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப் செயலி நீக்கம்

டிசம்பர் மாதம் முதல் விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இன்று முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப் செயலி நீக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக இன்று (ஜூலை 1) முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப் செயலி நீக்கம் செய்யப்படுகிறது. இதனால், இனி வாட்ஸ்அப் செயலியை, விண்டோஸ் மொபைல்களில் டவுன்லோடு செய்ய முடியாது. ஏற்கனவே, விண்டோஸ் மொபைலில் வாட்ஸ்அப் இருந்தால், அதுவும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு இயங்காது. 

மேலும், ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வாட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வாட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாது.